×

பழநிமாணிக்கம் எம்.பி. குற்றச்சாட்டுகுடந்தையில் பரபரப்பு முன் விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

கும்பகோணம், செப்.15: குடந்தையில் முன் விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் நத்தம் முதல் தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன் மகன் சுதாகரன் (21). அதே பகுதியில் வசிப்பவர் சிவசாமி மகன் ரவி (34). இவர்கள் இருவருக்கும் இடத்தகராறும், முன்விரோதமும் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் எல்லைக்கல் நட்டது தொடர்பாக கார்த்திகேயனை, ரவி தகாத வார்த்தைகளால் பேசி அடித்துள்ளார். இதையடுத்து கும்பகோணம் மடத்து தெரு பகவத் விநாயகர் கோயில் அருகே ரவி சென்றபோது தந்தையை ஏன் அடித்தாய் என சுதாகரன் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ரவி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாகரனின் இடது காலில் குத்திவிட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த சுதாகரன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து ரவியை கைது செய்தனர்.

புதுவை சாராயம் விற்றவர் கைது: கும்பகோணம் பெருமாண்டி மரப்பட்டறை அருகில் சாராயம் விற்பதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சென்று சோதனையிட்டபோது பழைய பாலக்கரை சென்னை சாலையில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் சங்கர்கணேஷ் (34) சாராயம் விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து 20 லிட்டர் புதுவை சாராயத்தை கைப்பற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பூதலூரில் பைக் மாயம்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கெங்கை சமுத்திரம் அன்பு நகர் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் பிரிமென் (25). இவர் கடந்த 10ம் தேதி இரவு வழக்கம் போல் வீட்டின் முன் தனது கருப்பு நிற பல்சர் பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து பிரிமென் பூதலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிந்து காணாமல் போன பைக்கை தேடி வருகிறார்.

திருமணத்திற்கு வந்தவர் பைக் விபத்தில் பலி: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெட்டவாய்த்தலை மேல அரியப்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (45). இவர் கடந்த 11ம் தேதி தனது மனைவி ராஜேஸ்வரியுடன் (37) திருக்காட்டுப்பள்ளியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள பைக்கில் வந்தார். திருக்காட்டுப்பள்ளி காவிரி புதுப் பாலம் அருகே பைக் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கருப்பண்ணன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ராஜேஸ்வரி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா