×

கல்லணை கால்வாயில் மிதந்த ஆண் சடலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு

தஞ்சை, செப். 15: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தஞ்சையில் நடந்த யாதவ மகாசபை மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சையில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன், மாநில துணை பொதுச் செயலாளர் அடைக்கலம் யாதவ், பொருளாளர் எத்திராஜ், மாநில துணை தலைவர் பழநியாதவ், மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில இளைஞரணி செயலாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க கால்நடைகளை பாதுகாத்திடவும், கால்நடை வளர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டும் கால்நடை வளர்ப்பு வாரியம் அமைத்து அதற்கு யாதவர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தனித்தொகுதிகளை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல தொகுதிகள் மாற்றப்படாமல் உள்ளன. மாற்றப்படாமல் உள்ள தொகுதிகளை தேர்தல் ஆணைய விதிப்படி சுழற்சி முறையில் மாற்றிட வேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலில் சென்று கலக்கும் நீரை சேமித்திடும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். நீர்நிலைகள், ஏரி, குளங்களை தூர்வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Tags : Kallani Canal ,
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...