×

மின்ஊழியர் மத்திய குழு கூட்டத்தில் முடிவு ஆலத்தூர் தாலுகா பகுதியில் மழை

பாடாலூர், செப். 15: ஆலத்தூர் தாலுகாவிலுள்ள பல்வேறு கிராம பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் மானாவாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம், சோளம், துவரை, உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் விதைப்பு செய்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களாக வானம் மழை பொழியாததால் மானாவாரி நிலங்களில் விதைப்பு செய்து முளைத்த பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இந்த மழை விதைப்பு செய்த பயிர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் ஆலத்தூர் தாலுகாவின் கிழக்கு பகுதியில் உள்ள சில்லகுடி, குளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு சுமார் 10 ஆண்டுக்கு பின்னர் தண்ணீர் வந்துள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : area ,Alathur Taluk ,
× RELATED அலங்காநல்லூர் பகுதியில் மழை: அறுவடை நேரத்தில் நீரில் மூழ்கிய நெற்பயிர்