×

தா.பழூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

தா.பழூர், செப். 15:அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் போசன் அபியான் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் முகமது பாருக் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் செல்வகுமார் , வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன், உதவி வேளாண்மை அலுவலர் கொளஞ்சி மற்றும் போஷன் அபியான் வட்டார திட்ட உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. காய்கறி, கீரை ,பழங்கள் மற்றும் சிறுதானிய கண்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன.

Tags : Nutrition Awareness Camp ,Palur ,
× RELATED தா.பழூர் ஒன்றியத்தில் 3 ஊராட்சியில் தேர்தல் நிறுத்தி வைப்பு