×

பெருமத்தூரில் பனைமர விதை நடவு செய்யும் பணி துவக்கம்

பெரம்பலூர்,செப். 15: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம் பெருமத்தூர், குன்னம், துங்கபுரம் மற்றும் கீழப்புலியூர் ஆகிய நான்கு கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பனைமர விதைகள் விதைப்பு தொகுப்புக்கு 50 ஆயிரம் எண்கள் என்ற விகிதத்தில் பெருமத்தூரில் துவங்கப்பட்டது. பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர்கணேசன்; துனை இயக்குநர் ராஜசேகர், வேப்பூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராணி, வேளாண்மை அலுவலர் அசோகன், துணை வேளாண்மை அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் பெருமத்தூர் கால்நடை மருத்துவ மனை வளாகத்தை சுற்றிலும் பனைமர விதைகள் விதைப்பு செய்யப்பட்டது. பின்பு பெருமத்தூர் செல்லியம்மன் கோவில் ஏரிக்கரை, பெருமத்தூர் நல்லூர் பெருமாள் கோவில் ஏரிக்கரை பகுதிகளில் விதைப்பு செய்யப்பட்டது. மற்றும் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலத்தின் வரப்புகளில் நடவு செய்வதற்காக பனைமர விதைகளை எடுத்துச்சென்று நடவு செய்தார்கள். இதனை பெருமத்தூர் மற்றும் பெ.நல்லூர் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் குழுவாக ஒன்றிணைந்து நடவு செய்தார்கள்.

 இந்த துவக்க விழாவில் கலந்து கொண்ட வேளாண்மை இணை இயக்குநர் பனை மர விதைகளை 3 மீட்டர் இடைவெளியில் ஒரு குழிக்கு இரண்டு முதல் மூன்று விதைகளை விதைக்க வேண்டும் என்றும் பனை மரத்தின் முக்கியத்துவங்களான நிலத்தடி நீர் சேமிப்பு , மண்அரிமானம் தடுத்தல் மற்றும் பனையிலிருந்து கிடைக்கும் பதநீர், பனை வெல்லம் மற்றும் நுங்கு பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

Tags : Commencement ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...