கரூர் காமராஜ் நகர் மெயின் சாலையில் பாதாள சாக்கடை குழி மூடியை சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர். செப். 15: பாதாள சாக்கடை குழி மூடியை சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.கரூர் காமராஜ் நகர் மெயின் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் குழி தோண்டி வேலை செய்தனர். வேலை முடிந்ததும் அந்த இடத்தில் ஒரு குச்சி நட்டு வைத்து விட்டு போய் விட்டனர். இதனால் பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இந்த இடத்தில் பேரிகார்டு வைத்து தகவல் பலகை வைக்க வேண்டும். எதையும் செய்யாத நிலை தொடர்கிறது. நகராட்சி அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை. இரவு நேரத்தில் தெருவில் வரும் வாகன ஓட்டிகள்விழுந்து எழுந்து செல்கின்றனர். உள்ளாட்சித்தேர்தலை நடத்தாததால் நகராட்சி நிர்வாகத்திடம் வைக்கப்படும் கோரிக்கைகள் கேட்பாரற்று கிடக்கிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags : Motorists ,Karur Kamaraj Nagar Main Road ,
× RELATED தரமற்ற ரோடுகளால் தவிக்கும் வாகன ஓட்டிகள்