×

கரூர் மாவட்டத்தில் தொடர் மழை சாலைகளில் தண்ணீர் தேக்கம்

கரூர், செப். 15: கருர் மாவட்டத்தில் கடந்த 3 நாளாக தொடர்ந்து மழை பெய்தது. நேற்று காலை வெயில் அடித்தது. மாலை இரவு நேரங்களில் நேற்றுமுன்தினம் கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி. கிருஷ்ணராயபுரம், தோகைமலை, குளித்தலை, கடவூர் ஆகிய இடங்களில் மழைபெய்தது. இதனால் சாலைகளில் நீர்தேங்கியது. நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு(மிமீட்டரில்): கரூர் 44.3. அரவக்குறிச்சி 8, அணைப்பாளையம் 15, க.பரமத்தி 32.2, குளித்தலை 19, தோகைமலை 24, கிருஷ்ணராயபுரம் 25.4, மாயனூர் 26, பஞ்சப்பட்டி 45.6, கடவூர் 25, பாலவிடுதி 76.2, மயிலம்பட்டி 63, மொத்தம் 403.70, சராசரி மழை அளவு 33.64. கரூர் மாவட்டத்தில் மழை அளவு கணக்கிடப்படும் 12 மையங்களிலும் மழை அளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாலவிடுதியில் 76.2, மயிலம்பட்டியில் 63 மிமீ மழை பதிவாகி உள்ளது.

மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் உபரி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு 26950 கனஅடிநீர் வந்தது. காவிரியாற்றில் 25340 கனஅடிநீர் திறக்கப்பட்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் வரத்து 18 ஆயிரம் கன அடியாக இருந்தது. நேற்று 26 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் கதவணையில் இருந்து கட்டளைமேட்டு வாய்க்காலில் 400 கனஅடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 400 கனஅடி, தென்கரை வாய்க்காலில் 800 கனஅடி, கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 10 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி. நேற்று 84.42 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 401 கன அடியாக மிகவும் குறைவாக இருப்பதால் அணை நிரம்புவதில் தாமதம் ஏற்படுகிறது.

Tags : rain roads ,Karur district ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்