அயோத்தியாப்பட்டணம் பகுதியில் கவுதம சிகாமணி எம்பி நன்றி தெரிவிப்பு

வாழப்பாடி. செப்.15:  அயோத்தியாப்பட்டணம் பகுதியில் கவுதம சிகாமணி எம்பி சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. கவுதம சிகாமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், மேட்டுப்பட்டி, கருமாபுரம், எஸ்.என்.மங்கலம், கூட்டாத்துப்பட்டி, அனுப்பூர், ஜெயமங்கலம், மின்னாம்பள்ளி, காரிப்பட்டி, பெரியகவுண்டாபுரம், அயோத்தியபட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, அதிகாரிபட்டி, சின்னனூர், வீராணம், குளளம்பட்டி வளையகாரனூர், டி.பெருமாபாளையம், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தைலானூர், மேட்டுப்பட்டி தாதனூர், குள்ளம்பட்டி, வலசையூர், சுக்கம்பட்டி, பூவனூர், குப்பனூர் மற்றும் ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார். அவருடன் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், சங்கர், கோபால் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: