×

திருச்செங்கோட்டில் 1005 மூட்டை மஞ்சள் ₹40 லட்சத்திற்கு விற்பனை

திருச்செங்கோடு, செப்.15: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில், விரலி மஞ்சள் குவிண்டால் ₹7223 முதல் ₹8009 வரையிலும், கிழங்கு மஞ்சள் ₹6399 முதல் ₹6899 வரையிலும், பனங்காளி ₹11979 முதல் ₹13699 வரையிலும் விற்பனையானது. மொத்தம் விவசாயிகள் கொண்டு வந்த 1005 மூட்டை மஞ்சள், ₹40 லட்சத்துக்கு விற்பனை ஆனது. ஏலம் மூலம் விற்பனை நடப்பதால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதனை மஞ்சள் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூட்டுறவு சங்க தலைவர் திருமூர்த்தி மற்றும் மேலாண் இயக்குனர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்