×

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ₹4.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி, செப்.15: ராயக்கோட்டை அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 31 பயனாளிகளுக்கு ₹4.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை  தாலுகா ராயக்கோட்டை அருகே உள்ள எச்சனஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு  திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட தனி துணை கலெக்டர் (சமூக  பாதுகாப்பு திட்டம்) குணசேகரன் தலைமை வகித்தார். தாசில்தார் சரவணன்  முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.  முகாமில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகளும், 7 பேருக்கு ரேஷன் கார்டு, 2 பேருக்கு வாரிசு சான்று, 5 பேருக்கு  பட்டா மாறுதல், 4 பேருக்கு தோட்டக்கலை துறை மூலம் சொட்டுநீர் பாசன  கருவிகள், 5 பேருக்கு வேளாண்மைத்துறை மூலம் பனை விதைகள் என மொத்தம் 31  பேருக்கு ₹4 லட்சத்து 21 ஆயிரத்து 477 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது.

தொடர்ந்து, முகாமில் பெறப்பட்ட 100க்கும் மேற்பட்ட மனுக்கள்  மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது. இதில் சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை,  வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள்  பங்கேற்று, தங்கள் துறை சம்மந்தப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினர்.  முகாமிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார்  செய்திருந்தார். முகாமில் அங்கன்வாடி பணியாளர்களால் ஊட்டச்சத்து குறித்து  கண்காட்சி நடந்தது.  வருவாய் ஆய்வாளர் கோமதி நன்றி கூறினார்.

Tags : People's Rehabilitation Program Camp ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்