×

மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 759 வழக்குகளில் தீர்வு

கிருஷ்ணகிரி, செப்.15:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 759 வழக்குகளில் ₹7.74 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மீனாசதீஷ் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கலாவதி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் அறிவொளி, சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மணி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி மற்றும் அனைத்து நீதிபதிகளும், வக்கீல்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் நடந்த நீதிமன்றத்தில் மொத்தம் 1,910 வழக்குகள் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 659 வழக்குகளில் ₹7 கோடியே 73 லட்சத்து 89 ஆயிரத்து 506 மதிப்பில் தீர்வு காணப்பட்டன. தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான ஆணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி மீனா சதீஷ் வழங்கினார்.

Tags : Lok Adalat ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...