×

திம்மராயசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

போச்சம்பள்ளி, செப்.15: மத்தூர் அடுத்த கண்ணன்டஅள்ளி கூட்ரோடு அருகே தாதனூர் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வழிபட்ட திம்மராய சுவாமி கோயில் சிதலடைந்து புதர் மண்டி காணப்பட்டது. இக்கோயில் திருப்பணிக்குழு தலைவர் கணேசன் தலைமையில் கோயில் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கோயில் பணி முடிவடைந்து கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கலச பூஜைகள், யாக பூஜைகள், ஆஞ்சநேயர், கருடாழ்வார் மற்றும் பாறை மீது எழுந்தருளியுள்ள நாகதேவதைக்கும் அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags : Thimmarayaswamy Temple ,
× RELATED ஓசூர் அருகே 800 ஆண்டு பழமையான திம்மராயசுவாமி கோயில் தேரோட்ட திருவிழா