×

குடியிருப்பு பகுதியில் பழமையான மரத்தை அகற்ற வலியுறுத்தல்

கடத்தூர், செப்.15: கடத்தூர் அடுத்த தாளநத்தம் கிராமத்தில் 1200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், குடியிருப்பு பகுதிகளில் நடுவே பழமையான புளியமரம் உள்ளது. மழை காலங்களில் லேசான காற்று அடித்தால் கூட, எந்த நேரத்திலும் மரம் முறிந்து, அருகில் உள்ள வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால், உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அபாயகரமான நிலையில் உள்ள பழமையான புளியமரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,area ,
× RELATED போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு