பென்னாகரம், பாப்பாரப்பட்டியில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை

பென்னாகரம், செப். 15: பென்னாகரத்தில் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை, இன்பசேகரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். பென்னாகரம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி, பென்னாகரம் எம்எல்ஏ அலுவலகம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஏரியூர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வானவில் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை திமுக எம்எல்ஏ இன்பசேகரன்,  இளைஞர்களுக்கு படிவங்களை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் காளியப்பன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், தாரணி கமலேசன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டியில் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் எம்எல்ஏ இன்பசேகரன் தலைமை நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர்கள் சி.செல்வராஜ், என்.செல்வராஜ், பேரூர் செயலாளர் சண்முகம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் திருவேங்கடம், பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குட்டி, ஒன்றிய இளைஞரணி அறிவழகன், மாவட்ட பிரதிநிதி விஜய்ஆனந்த், பகுத்தறிவு பேரவை வீரமணி மற்றும் நிர்வாகிகள் காசி, சுரேஷ், சதாசிவம், மாதேஸ், சிலம்பரசன், வெங்கடேசன், ஜெயக்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 200 புதிய உறுப்பினர்கள் இளைஞரணியில் சேர்ந்தனர்.

Tags : DMK ,youth members ,Pannapuram ,Paparapatti ,
× RELATED ஆட்சியில் இருந்தாலும்,...