சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி

ஸ்ரீமுஷ்ணம், செப். 15:ஸ்ரீமுஷ்ணம் கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(44). இவர் முஷ்ணம் கடை வீதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு கடைவீதியில் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் சக்திவேல் தாயார் வனஜா அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED மெட்ரோவில் சைக்கிள் எடுத்துச்செல்ல அனுமதி: அதிகாரி தகவல்