×

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்வு

பண்ருட்டி, செப். 15: பண்ருட்டி நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கற்பகவள்ளி தலைமையில் நடந்தது. இதில் சமரசம் செய்யக்கூடிய கிரிமினல், சிவில், கல்விக்கடன், விவசாயக்கடன், விவாகரத்து, ஜீவனாம்சம், வாகன விபத்து உள்ளிட்ட 874 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் ரூ.1,64,49,250க்கு தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சையத்ரஷீத், உறுப்பினர்கள் ராஜசேகரன், சிவராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : National People's Court ,
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி