×

தொழிலாளி மீது தாக்குதல்

திருக்கோவிலூர், செப். 15: திருக்கோவிலூர் அருகே சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் மகன் முபாரக் (37). திருக்கோவிலூரில் உள்ள காய்கறி மண்டியில் வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஆறுமுகம் மகன் சுருளிகந்தசாமி என்பவருடன் சந்தப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சினிமா தியேட்டர் எதிரில் வண்டியை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த ஷாஜகான் மகன் சதாம்உசேன் பீர்பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அருகில் இருந்தவர் பிடிக்க முயன்றபோது சதாம்உசேன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த முபாரக் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் முபாரக் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்கு பதிந்து தப்பியோடிய சதாம்உசேனை தேடி வருகிறார்.

Tags :
× RELATED மின் ஊழியர் பலி