பைக் பெட்டியில் இருந்த ₹71 ஆயிரம் திருட்டு

மரக்காணம், செப். 15: மரக்காணம் அருகே பனிச்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர்(65). விவசாயி. இவர் கடந்த 13ம் தேதி மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை மீட்க ரூ. 71 ஆயிரத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது மின்சாரம் இல்லாததால் சிறிது நேரம் கழித்து வருமாறு வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் வங்கியின் அருகில் உள்ள ஓட்டல் எதிரில் தனது பைக்கை நிறுத்திவிட்டு, பைக் சாவியை வண்டியிலேயே விட்டுவிட்டு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு விட்டு வந்து தனது பைக்கை பார்த்தபோது பைக் பெட்டி திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 71 ஆயிரம் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குணசேகர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வங்கி மற்றும் ஓட்டல் எதிரில் இருந்த சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது  அடையாளம் தெரியாத 4 வாலிபர்கள் வந்து பைக்கில் இருந்த சாவியை எடுத்து பைக் பெட்டியை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தெரிந்தது. ஆனால் அந்த 4 பேரும் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : theft ,
× RELATED தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு