×

ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், செப். 15: தேசிய புதிய கல்வி கொள்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், தொடக்க கல்வியை அழிக்க நினைக்கிற அரசாணை 145ஐ திரும்பபெற வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அந்தந்த கல்வி மாவட்டங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ, ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிதி காப்பாளர் சண்முகசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட ஒருங்கிணைப்பாளர் தம்புராமதாஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லாரன்ஸ், அருள்ஜோதி, பெர்க்மான்ஸ், சவரிமுத்து, காசிசெல்வராசு, ராஜாராம், செந்தில், ராஜ்குமார், வெங்கடேசன், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கோரிக்கையினை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை