×

விசிக தெருமுனை விளக்க கூட்டம்

திண்டிவனம், செப். 15: திண்டிவனத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரவுள்ள புதிய தேசிய கல்வி வரைவு கொள்கையை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் தெருமுனை விளக்க கூட்டம் காந்தி சிலை, மேம்பாலம் கீழ் பகுதியில் நடைபெற்றது. முன்னதாக காந்தி சிலை அருகில் நடைபெற்ற தெருமுனை விளக்க கூட்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடைபெற்றது.

அப்போது கொட்டும் மழையிலும் ஏராளமான தொண்டர்கள் இருந்ததால் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் இமயன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் திலிபன் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் சேரன் விளக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் பாலாஜி, காஞ்சி, விழுப்புரம் மண்டல செயலாளர் விடுதலை செழியன் மற்றும் சிபிசந்தர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் குருபஞ்சர் ராவ், இளஞ்சேரன், செல்வச் சீமான், இன்ப ஒளி, கலைவாணன், சசிகுமார், பழனி, சீனிவாசராவ், வெற்றிவேல், விஸ்பதாஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Visika Thermotype Meeting ,
× RELATED திருட்டு, வழிப்பறி வழக்கில்...