×

கடைமடை பகுதிக்கு வந்தது பாசனநீர் விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னமனூர், செப். 15: தினகரன் செய்தி எதிரொலியால் கடைமடைப்பகுதியான மார்க்கையன்கோட்டை குச்சனூர் பகுதிகளில் வாடும் நாற்றாங்கால் உயிர் பெறும் வகையில் பாசனநீர் வந்து ேசர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் வயல்வெளிகளுக்கு ஆக.29ம் தேதி முல்லைப் பெரியாற்று அணையில் பாசனநீர் திறந்து விடப்பட்டது. சின்னமனூர் பகுதியிலுள்ள நான்காயிரம் ஏக்கர் வயல்வெளிகளுக்கு முதல் போகத்திற்கு விதை நெல் பாவுவதற்காக நாற்றாங்கால் பாசனத்திற்கு தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டது.

இதனால் துணை வாய்க்கால் மற்றும் கடை மடை பகுதிகளுக்கு பாசனநீர் வந்து சேரவில்லை.இதனால் மார்க்கையன்கோட்ைட குச்சனூர் பகுதியில் பாசனநீர் இல்லாமல் விதை நெல் கருகுவது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனால் பாசனநீர் தாமதமாக கடைமடைக்கு வந்து சேர்ந்தது. மார்க்கையன்கோட்டை குச்சனூர் பகுதிகளில் வாடும் நாற்றாங்கால் பயிர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். அத்துடன் கால்வாயில் இருந்த அடைப்புகளை சிஅகற்றி நடவடிக்கை எடுத்தனர். தற்போது நாற்றாங்காலுக்கு தண்ணீர் பாய்ச்சி தொடர்ந்து நடவுப் பணியினை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பாசனநீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Irrigation farmers ,shop ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...