டி.கல்லுப்பட்டி அருகே டூவீலர் மீது கார் மோதி தந்தை, மகன் பலி

பேரையூர், செப். 15: டி.கல்லுப்பட்டி அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை  மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள மறவன்குத்தை சேர்ந்தவர் பெருமாள் (60). இவரது மகன் ஹரிகிருஷ்ணன் (30). இருவரும் விருதுநகர் மாவட்டம்,  வத்திராயிருப்பு அருகேயுள்ள அக்கனாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு  விசேஷத்திற்கு டூவீலரில் சென்றனர். விசேஷ நிகழ்ச்சியில் கலந்து ெகாண்ட  பின்னர் திருமங்கலத்துக்கு கிளம்பினர்.டி.கல்லுப்பட்டி அருகே  திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் சோலைப்பட்டி கருப்பசாமி கோயில் பகுதியில்  நள்ளிரவு 12.30 மணியளவில் வந்தபோது, எதிரே மதுரையிலிருந்து வந்த கார்  டூவீலர் மீது மோதியது.

Advertising
Advertising

இந்த விபத்தில் பெருமாள், ஹரிகிருஷ்ணன் தலை நசுங்கி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தூக்கியெறியப்பட்ட  டூவீலர் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த டி.கல்லுப்பட்டி போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி  திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில்  சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: