×

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்ததானத்தை ஊக்குவிக்கும் `உதிரம்-19’ மாரத்தான்

மதுரை, செப். 15:  மதுரை அரசு மருத்துவக்கல்லூரி ரத்ததான கழகம் சார்பில், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘உதிரம்-19 மாரத்தான்’ நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள, அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து அதிகாலை 6.20 மணிக்கு மாரத்தான் துவங்கியது, மதுரை மாநகர போலீஸ் துணைக்கமிஷனர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இதனை துவக்கி வைத்தார். மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா தலைமை வகித்தார். மருத்துவமனையின் ரத்த வங்கியின் துறைத்தலைவர் டாக்டர் சிந்தா, மருத்துவக்கல்லூரி ரத்ததான கழக தலைவர் டாக்டர் ரத்தினவேல் ஆகியோர் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து பேசினர்.   

இந்த மாரத்தானில் மதுரை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர், செவிலியர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், போலீசார், பொதுமக்கள் என ஆயிரத்து400 ஆண்கள், 700 பெண்கள் கலந்து கொண்டனர்.
மாரத்தான் அண்ணா பஸ் நிலையம், சிவகங்ைக ரோடு, வக்புவாரிய கல்லூரி, ராஜா முத்தையா மன்றம், மாநகராட்சி, தல்லாகுளம், கோரிப்பாளையம் வழியாக அரசு மருத்துவமனை வந்து, அங்கிருந்து பனகல்ரோட்டில் உள்ள மருத்துவமனை நுழைவு வாயில் முன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றவர்கள் ரத்ததானத்தின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாதைகளை ைககளில் ஏந்திச் சென்றனர். மருத்துவ மாணவர் செயலர் நந்தாகிஷோர் நன்றி கூறினார்.

Tags : marathon ,bloodshed ,Madurai Government Medical College ,
× RELATED திருத்தணியில் கல்லூரி மாணவர்களின் 100...