மதுரை வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி மூர்த்தி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

மதுரை, செப். 15: மதுரை வடக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணிக்கு 1 லட்சம் உறுப்பினர் சேர்க்கும் பணியை மூர்த்தி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, தமிழகம் முழுவதும் அந்த அணிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கப்படுகிறது. இதன்படி மதுரை வடக்கு மாவட்டம் முழுவதும் நேற்று உறுப்பினர் சேர்க்கும் பணி ஆரம்பமானது. மதுரை அய்யர்பங்களாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ தலைமை ஏற்று உறுப்பினர் சேர்ப்பை தொடங்கி வைத்தார்.

Advertising
Advertising

இது குறித்து அவர் கூறும்போது, “மதுரை வடக்கு மாவட்டத்தில் 1 லட்சம் உறுப்பினர் சேர்க்க முடிவு செய்யப்பட்டு, அந்த பணிகள் விறுவிறுப்புடன் ஆரம்பமாகி உள்ளன. மாவட்டம் முழுவதும் இஞைர்கள் ஆர்வத்துடன் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர்” என்றார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, துணை அமைப்பாளர் பாலாண்டி, அய்யப்பன், திமுக பகுதி செயலாளர் பொம்மத்தேவன், வட்ட செயலாளர்கள் சசிகுமார், மணி, ராமமூர்த்தி, செங்கிஸ்கான், முருகேசன், செந்தில், பாபு, இளைஞரணி நிர்வாகிகள் கண்ணன், கார்த்திகேயன், சீனிவாசன், ஆனந்த் பங்கேற்றனர்.

Related Stories: