மதுரை நகர் பகுதியை கலக்கிய 2 கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு 132 பவுன் நகைகள் பறிமுதல்

மதுரை, செப். 15: மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 132 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை, அண்ணாநகர், கே.கே.நகர், கே.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில், ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய ேபாலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதன்பேரில், உதவி கமிஷனர் ேவணுகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.

 இந்நிலையில், திருச்செந்தூர், தெரிக்குடியிருப்பு பகுதியைச் ேசர்ந்த பெரியசாமி என்பவர் மதுரையில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், இவரது நண்பர் ரவிச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து திருடியது உறுதியானது. இதையடுத்து இவர்களிடம் இருந்து 132 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான பெரியசாமி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : robbers ,jewelery ,Madurai ,
× RELATED நாகர்கோவிலில் பண மோசடியில் கைதான...