×

ரூ1.18 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளகோவில்,செப்.15: வெள்ளகோவில் அடுத்துள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடக்கிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 43பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 24,733 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.26.10க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.22.10க்கும், சராசரி ரூ25.70க்கும் ஏலம் போனது. 9 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.1லட்சத்து 18ஆயிரத்து 365க்கு ஏலம் போனது என, விற்பனைகூட மேற்பார்வையாளர்  ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...