×

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு

திருப்பூர், செப்.15: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாளை (16ம் தேதி) முதல் பயோமெட்ரிக் கருவி மூலம் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் முதல் கட்டமாக அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த கட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்பட உள்ளது.

இதற்காக பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவிகள் கடந்த வாரம் நடுநிலை பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாந்தா கூறுகையில், ‘‘அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் கருவி முறையிலான வருகைப்பதிவேடு முறை செயல்படுத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆதார் நடைமுறை தொடர்பான விவரங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தங்கள் ஆதார் எண் கடைசி 8 எண்களை பணிக்கு வரும்போது பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்து தங்கள் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இந்த வருகைப் பதிவு முறை நாளை (16ம் தேதி)  முதல் நடைமுறைக்கு வர உள்ளது,’’ என்றார்.

Tags : middle school teachers ,
× RELATED நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை...