தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 371 வழக்குகள் மீது உடனடி தீர்வு

பொள்ளாச்சி, செப். 15: பொள்ளாச்சி கோர்ட்டில் நேற்று நடந்த, தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 371 வழக்குகள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு ரூ.3.58 கோடிக்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டது.  பொள்ளாச்சி உரிமையியல் நீதிமன்றம் சார்பில் ஒவ்வொரு மாதமும், மக்கள் நீதிமன்றம் நடத்தப்படும். இதன் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்படுகிறது. இதில், இந்த மாதத்திற்கான லோக் அதாலத் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றமானது, நேற்று மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

Advertising
Advertising

இதற்கு, கோவை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முனியராஜ் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி வட்ட சட்ட பணிக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான ரேவதி, ஜேஎம்-1 மாஜிஸ்திரேட் தங்கமணிகணேஷ், அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் மற்றும் அமர்வு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

 இதில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 60ல், 25 வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ. 1 கோடியே 29 லட்சத்து 5ஆயிரத்து 229க்கும், செக்மோசடி வழக்கில் 548ல் 27வழக்கு எடுத்து கொள்ளப்பட்டு ரூ.51லட்சத்து 39ஆயிரத்து 819க்கும், சமரசத்திற்குட்பட்ட குற்றவியல் வழக்குகளில் 304ல் 232வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.2லட்சத்து 54ஆயிரத்து 100க்கு தீர்வு காணப்பட்டது.  மேலும்,  நீதிமன்றத்தில் தொடரப்படாத வங்கி வழக்குகளில் 785ல் 50வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.75லட்சத்து 78ஆயிரத்து 200க்கும். பண பரிவர்த்தனை மற்றும் சொத்து வழக்குகளில் 228ல் 26வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.99லட்சத்து 6ஆயிரத்து 579க்கு தீர்வு காணப்பட்டது. வாரிசு உரிமை கோரிய வழக்குகளில் 102ல் 12வழக்குக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவை சமரசம் செய்யப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றம்  மூலம் மொத்தம்  2066வழக்குகளில் 371வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, மொத்தம் ரூ.3 கோடியே 58 லட்சத்து 13 ஆயிரத்து 922க்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டதாக, வட்ட சட்டப்பணி ஆணை குழுவினர் தெரிவித்தனர்.

வால்பாறை: அதேபோல் வால்பாறை நீதி மன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்ில் மாவட்ட உரிமையியல், மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா தலைமை வகித்தார்.  இதில் சிவில் வழக்கு 42, குற்ற வழக்குகள்  36,  தீர்வு காணப்பட்ட செக்மோசடி வழக்கு 3, சமரச தொகை ரூ.4,10,000 ஆகும்.  இதன்படி சிவில் வழக்குகளில் சமரச தொகை ரூ. 3,73,000 என்றும், சிறு வழக்குகளில் பெறப்பட்ட அபராதம் ரூ.75.000 என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதில் வழக்கிறஞர்கள் பெருமாள், முருகன், சுமதி, கலையரசி மற்றும் சட்ட ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: