பஸ்சில் வந்த பெண் வைத்திருந்த 18பவுன் மாயம் போலீசார் விசாரணை

பொள்ளாச்சி, செப். 15: கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள குடியிருப்பில் வசிப்பவர் சண்முகநாதன் மனைவி பிச்சம்மாள்(41). இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, உடுமலையில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கோவைக்கு செல்ல பஸ்சில் புறப்பட்டார். பொள்ளாச்சிக்கு அந்த பஸ் வந்தபோது, கீழே இறங்கி ஒரு கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின் மீண்டும் பஸ்சில் ஏறியபோது, தனது கையில் இருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertising
Advertising

பின் அந்த பையை, பிச்சம்மாள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் காணாமல் போன பையில்  திருமணத்தின்போது அணிந்திருந்த 18 பவுன் நகை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் பிச்சம்மாள் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: