வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை, செப். 15: வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் 13 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சோலையார் தோட்ட மருத்துவமனைக்குள் புகமுயன்ற காட்டுயானைகளை தொழிலாளர்கள் திரண்டு ஆம்புலன்சில் சைரனை ஒலிக்க செய்து விரட்டினர். அங்கிருந்து சென்ற யானைகள் சோலையார் எஸ்டேட் பஜார் பகுதியில் புகுந்தது. இதை அறிந்த  அப்பகுதியினர் யானைகளை விரட்ட முயன்றனர். இருப்பினும் யானைகள் பழனிச்சாமி என்பவரின் மளிகை கடையை உடைத்து சேதப்படுத்தியது. அதேபோல் மற்றொரு கூட்ட யானைகள் தாய்முடி எஸ்டேட் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது. வால்பாறை பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: