வாலிபர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்

கோவை, செப்.15: வாலிபர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்ட நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரவி (27). செல்போன் கடையில் வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி (23). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ரவி தனது மனைவியிடம் மேட்டுப்பாளையத்தில் நண்பரின் கார் பழுதாகி இருப்பதாகவும், அதனை எடுத்துவர வேண்டும் என்பதால் நண்பர்களான ஷ்யாம், சரவணன், அலாவுதீன் ஆகியோருடன் செல்வதாகவும் கூறிச்சென்றார்.

Advertising
Advertising

இந்த நிலையில், சோமனூர் பகுதியில் இறந்து கிடந்த ரவியை மீட்ட கருமத்தம்பட்டி போலீசார் அவரது உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். ரவி மது அருந்தியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக போலீசார் கூறியதாகவும், அவருக்கு குடிப்பழக்கம் இல்லை என்றும் கூறிய உறவினர்கள் ரவியை கொலை சிலர் செய்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். மேலும், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, முறையாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ரவியின் உடலை வாங்கிச்சென்றனர்.

Related Stories: