×

111வது பிறந்த நாள் விழா அண்ணாசிலைக்கு இன்று தலைவர்கள் மாலை

கோவை, செப். 15:கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ  வெளியிட்டுள்ள அறிக்கை:பேரறிஞர் அண்ணாவின்  111-வது பிறந்த நாள் விழா இன்று நடக்கிறது. இதையொட்டி, கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை 9 மணிக்கு மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் பி.நாச்சிமுத்து தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணப்பன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மெட்டல் மணி, நந்தகுமார், குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

எனவே, இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள், திமுக முன்னணியினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Birth Anniversary Anniversary ,
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை