கோவையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்த 5 பேர் மீது வழக்கு

கோவை, செப்.15:கோவையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் (சட்டம்,ஒழுங்கு) பாலஜி சரவணன் தெரிவித்துள்ளார்.  தமிழகம் முழுவதும் அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இந்நிலையில், அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக கோவை மாநகரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைதுணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மாநகரில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். நேற்றுவரை 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் புகார் அளிக்கலாம். அதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றார்.

Related Stories: