×

தேனி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

தேனி, செப்.11: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேனி வக்கீல் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வக்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் செந்தில்குமார், துணை செயலாளர் ஆறுமுகம் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தின் போது மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹல் ரமணியை மேகாலயாவுக்கு இடமாறுதல் செய்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை தலைமை உயர் நீதிமன்ற நீதிபதியை இடமாறுதல் செய்ததை கண்டித்து நேற்று வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.

Tags : Theni Attorneys Court ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு