எனது மகன் திருமணத்தை நடத்தி தர வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதன்முறையாக சேலம் வரும் முதல்வர்

சேலம், செப்.11: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா மறைந்தவுடன், ஆட்சி பொறுப்புக்கு சேலம் மண்ணின் மைந்தர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவர், முதல்வராகி 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, 3ம் ஆண்டு நடக்கிறது. மாநிலம் முழுவதும் விவசாயத்தை மேம்படுத்த குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஏரி, குளங்களை தூர்வாரச் செய்துள்ளார். தொழில்துறையை மேம்படுத்த 2வது முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி, வெற்றி கொடி நாட்டினார்.தமிழகத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்த வெளிநாட்டு கம்பெனிகளின் முதலீடுகளை அதிகளவு திரட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். இதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார். இதில், ஒட்டுமொத்தமாக ₹8,835 கோடிக்கு வெளிநாட்டு முதலீட்டை பெற்றுள்ளார். இதன்மூலம் 37 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள், தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவுள்ளது. அமெரிக்காவில் இருந்து மட்டும் ₹5,080 கோடி ஒப்பந்தத்தை முதல்வர் செய்துள்ளார். துபாயில் ₹3,750 கோடி தொழில் முதலீட்டை பெற்று, தமிழகத்தை செழிப்படைய செய்திருக்கிறார். உலக முன்னணி நாடுகளை சுற்றி வந்து, தொழில் முதலீடுகளை பெற்றுக் கொண்டு, சேலத்திற்கு முதன்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். அதிலும், எனது மகன் ஜனார்த்தனன்-சௌந்தர்யா திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துகிறார். இதனால் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். விழாவிற்கு வரும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் வரவேற்கிறேன்.இவ்வாறு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ கூறினார்.

Advertising
Advertising

Related Stories: