கோயில் விழா நடத்துவதில் பிரச்னை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

கெங்கவல்லி, செப்.11:கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டியில், கடந்த 40 ஆண்டுகளாக பொன்னர் -சங்கர் தெருக்கூத்து நாடக தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி பகுதியில் உள்ள சக்கரத்தாழ்வார் பெருமாள் கோயில் முன்பு, மழை வேண்டி தெருக்கூத்து கலைஞர்கள் சார்பில் இந்த விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில், இருதரப்பு மோதல் காரணமாக, இந்த ஆண்டு தெருக்கூத்து நாடக தேர்த்திருவிழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில், தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படாததால், நேற்று கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவக்கொழுந்து, டிஎஸ்பி ராஜூ தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டம் தோல்வியில் முடிந்தது.

Advertising
Advertising

Related Stories: