சேலத்தில் ஒரே நாளில் துணிகரம் 2 பெண்களிடம் 16 பவுன் நகை பறிப்பு

ேசலம், செப்.11: சேலம் மாசிநாயக்கன்பட்டி அப்பு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வித்யா(65). இவர் நேற்று முன்தினம், தனது வீட்டு வாசல் முன்பு பூப்பறித்து கொண்டிருந்தார். அப்போது இந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒருவரும், துணியால் முகத்தை மறைத்து கட்டிக் கொண்டு ஒருவரும் வந்தனர். அப்போது, அவர்கள் பூப்பறித்துக் கொண்டிருந்த வித்யா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அவர் நகையை தனது கைகளால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். அதற்குள் மர்மநபர்கள் 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து வித்யா அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இதேபோல், சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காவேரி. இவரது மனைவி கலைச்செல்வி(35). சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் உறவினர் திருமணத்தில் பங்கேற்க, ராமலிங்க வள்ளலார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்மநபர்கள், கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். உடனே, கலைச்செல்வி சத்தம் போட்டார். அதற்குள் மர்மநபர்கள் பைக்கில் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து கலைச்செல்வி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: