முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

சேலம், செப்.11: சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாநகர், மாவட்ட அதிமுக செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம்-தனலட்சுமி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு சேலம் வந்தார். முன்னதாக மாவட்ட எல்லையான சங்ககிரியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கலெக்டர் ராமன் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றார். பின்னர் நெடுஞ்சாலை நகரில் அவரது இல்லத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertising
Advertising

Related Stories: