சேலம் மேற்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணிக்கு 60 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு

இடைப்பாடி, செப்.11: சேலம் மேற்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணிக்கு 60 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், இளைஞரணி ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். அவைத்தலைவர் கோபால், துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், கீதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், அம்மாசி, நெசவாளரணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை சிறப்புரையாற்றினார். மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தி, ஒவ்வொரு தொகுதிக்கும் 20 ஆயிரம் பேர் வீதம், மேற்கு மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரம் பேரை உறுப்பினராக சேர்ப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பரமசிவம், ரவிச்சந்திரன், நல்லதம்பி, பாஷா, ராஜேஷ், பச்சமுத்து, காசிவிஸ்வநாதன், இளைஞரணி அமைப்பாளர்கள் செந்தில்குமார், முத்தமிழ்செல்வன், நிர்வாகிகள் தங்கவேலு, மாதையன், சிங்காரவேலு, ராமலிங்கம், ரவி, சரவணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: