4வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு பூலாம்பட்டி காவிரி கரையோரம் பாதுகாப்பு ஏற்பாடு மும்முரம்

இடைப்பாடி, செப்.11: பூலாம்பட்டி காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடுவதால், 4வது நாளாக படகு போக்குவத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி, விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பூலாம்பட்டி பகுதியில் இருகரைகளையும் தொட்டவாறு காவிரி பெருக்கெடுத்துச் செல்கிறது. இதையடுத்து, பூலாம்பட்டி- ஈரோடு மாவட்டம் நெறிஞ்சிப்பேட்டை இடையே, நேற்று 4வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும்,

வெள்ளப்பெருக்கை பார்க்க வருவோர் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது, அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி கரையோரம் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: