×

உலக கோப்பை கபாடி வீரர் படித்த அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை கண்டுகொள்ளுமா கல்வித்துறை

இளையான்குடி, செப். 11: உலக கோப்பை கபாடி வீரர் படித்த சாலைக்கிராமம் அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை. காலிப் பணியிடத்தை நிரப்ப, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா, சாலைக்கிராமம் அரசுப் பள்ளி, கடந்த 1961ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1979ம் ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இளையான்குடி ஒன்றியத்திலேயே முதல் அரசு மேல்நிலைப் பள்ளியாக செயல்படும் இந்த அரசு பள்ளியில், முப்பதுக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களே அதிகளவில் பயின்று வருகின்றனர். சிறப்பாக செயல்படும் என பெயரெடுத்த இந்த பள்ளியில், விளையாட்டு என்பது இன்றைய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லை. காலியிடமாகவே இதுநாள்வரை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் மாவட்ட அளவில் விளையாடி பரிசுகள் வாங்கி வந்த இந்த பள்ளி மாணவர்கள், தற்போது ஒன்றிய அளவில்கூட கலந்துகொள்ள முடியவில்லை. தேவையான தகுதிகள் இருந்தும் முறையான பயிற்சி, ஊக்குவிப்பு இல்லாததால் தகுதியுள்ள கிராமப்புற மாணவர்கள் வகுப்பறை பாடத்திலேயே முடங்கிப்போயுள்ளனர். போலீஸ், ராணுவம், உட்பட பாதுகாப்புத்துறையில் சேர்வதாக கனவு காணும் மாணவர்களின் நிலை சிதைந்து போகும் நிலையில் உள்ளது. மேலும் பள்ளியில் கடந்த நான்கான்டுகளாக விளையாடவும், மைதானம் பக்கம் செல்லவும் ஆசியர்கள் அனுமதிப்பதில்லை. போலீஸ், ராணுவம் உட்பட பாதுகாப்புத்துறையில் சேர்வதாக கனவு காணும் மாணவர்களின் எதிர்கால கனவுகளை, கல்வித்துறை அதிகாரிகள் சிதைத்து வருவதாக முன்னாள் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த உலக கோப்பை கபாடி போட்டியில் பங்குபெற்று, தங்கப் பதக்கம் வென்ற தனராஜ் இந்த சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தது குறிப்பிடதக்கது.  மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க,  கலெக்டரும், கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறியதாவது: பள்ளியில் விளையாட்டு வகுப்பை கடைபிடிப்பதே இல்லை. முறையான பயிற்சியும், ஊக்குவிப்பும் இல்லாததால் பல கிராமப்புற மாணவர்கள் தகுதியிருந்தும் முடங்கியுள்ளனர். விளையாட அனுமதிக்காததால், மைதானம் புதர் மண்டி உள்ளது. விளையாட்டு உபகரணங்களுக்கென்று வழங்கப்படும் நிதி என்ன ஆனதோ தெரியவில்லை. எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத, திறமையான உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடக்க வேண்டும்’ என்றனர்.



Tags : Government ,World School Kabaddi Player ,School No Physical Teacher ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...