கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல். செப்.11:  ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழி வாங்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட வழக்கு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் நேற்று இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில், இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் பரமத்திவேலூர் வட்டார செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழி வாங்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட வழக்கு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரனை பணி இடைநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவேந்தன், இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாதேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Teachers ,
× RELATED மழலையர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி