காமராஜர் கல்வி நிறுவனத்தில் மாநில அளவிலான

சதுரங்க போட்டிசேந்தமங்கலம், செப்.11: பொம்மைக்குட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் எஜூகேஷனல் சிட்டி, எலைட் ரோட்டரி சங்கங்கள் இணைந்து,   மாநில அளவிலான இளையோர் சதுரங்க போட்டியை காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தினர். போட்டிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர்  நல்லதம்பி தொடங்கி வைத்தார். இதில் 8, 10, 12 மற்றும் 16 வயதிற்குட்பட்ட இருபாலருக்கு 8 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 15 இடங்கள் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 8 வயதிற்குட்பட்டோர் பிரிவில்,  நாமக்கல் தர்ஷன், ரத்னாகர் ஆகியோர் முதலிடமும், 10 வயதிற்குட்பட்டோர் பிரிவில் திருப்பூர் விதுலா, திருச்சி அன்புச்செல்வன் ஆகியோர் முதலிடமும் பிடித்தனர்.அதேபோல், 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் திருப்பூர் கோகுலகிருஷ்ணன், சேலம் கனிஷ்கா முதலிடமும், 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் நாமக்கல் தனுஷ், சுந்தரராஜன், சேலம் கனிஷ்கா முதலிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி நிறுவனத்தின் தலைவர் நல்லதம்பி பரிசு வழங்கினார். இதில் ரோட்டரி சங்க தலைவர்கள் பன்னீர்செல்வம், விஜய் பாண்டியன், முன்னாள் தலைவர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kamarajar Educational Institute ,
× RELATED மாவட்டத்தில் 1276 மையங்களில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து