விவசாயிகளுக்கு ஓய்வூதிய அட்டை

சேந்தமங்கலம், செப்.11: எருமப்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள சிறு, குறு விவசாயகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர் கலந்து கொண்டு, 18 வயது முதல் 40 வயது நிரம்பிய தகுதியுடைய சிறு,குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய அட்டை வழங்கி பேசுகையில், ‘இத்திட்டத்தில் தகுதியுடையவர்கள் ₹55 முதல் ₹200 வரை, அவரவர் வயதிற்கேற்ப பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மாதந்தோறும் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். பதிவு செய்த விவசாயிகளுக்கு 60 வயது முடிந்தவுடன் மாதம் ₹3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். பதிவு செய்த விவசாயிகள் 60 வயது கடந்து எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், அவரது வாரிசுதாரர்களுக்கு, அவர்கள் உயிருடன் இருக்கும் வரை மாதம் ₹1500 வழங்கப்படும்,’ என்றார்.கூட்டத்தில், வேளாண் அலுவலர் மோகனப்பிரியா, விதை அலுவலர் முருகேசன், உதவி வேளாண் அலுவலர் கார்த்திகேயன், அட்மா திட்ட பணியாளர்கள் சுரேஷ், திரேகப்பிரியா, பரணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED விவசாயிகள் ஏமாற்றம்