மாவட்டத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்

நாமக்கல், செப்.11: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை அறிக்கையில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை: அடுத்த 3 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் லேசானது முதல் மிதமானது வரையில் மேக மூட்டத்துடனும், சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக, மிதமான அளவு மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மட்டுப்பட்டு, மணிக்கு 6 கிமீ வேகத்தில் வீசும். பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் இயல்பான அளவுகளில் காணப்பட்டு, காற்றின் ஈரப்பதம் உயர்ந்து காணப்படும்.தற்போதைய வானிலையில் மழைக்கு வாய்ப்புள்ளதால், மாடுகளுக்கு தேவையான அளவு பசும்புற்கள் கிடைக்கும். பசும்புற்கள் மற்றும் மேய்ச்சல் மட்டுமே போதுமானதாக இருக்காது. தரமான அடர் தீவனமும், பால் உற்பத்திக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். இதனால் மாடுகளின் பால் உற்பத்தி திறன் முழுமையாக வெளிப்படும்.கோழிகளுக்கான வானிலையை பொறுத்தவரை தீவன எடுப்பு, முட்டை உற்பத்தி மற்றும் முட்டை ஓட்டின் தரம் ஆகியவை இயல்பாக காணப்படும். சோயா புண்ணாக்கின் புரதத்தின் அளவை பரிசோதனை செய்து அறிந்து கொண்ட பின்னரே, தீவனத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் அரைத்த தீவனத்தின் புரதம், கோழிகளின் தேவைக்கு ஏற்ப கொடுக்க முடியும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,
× RELATED மாவட்டத்தில் சிறந்து செயல்பட்ட பள்ளிகளுக்கு கேடயம்