சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுநீர்

திருச்செங்கோடு,  செப். 11: திருச்செங்கோடு மலை கிரிவலப்பாதையில் இருந்து கரட்டுப்பாளையம்  செலலும் இணைப்பு சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம்  வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருச்செங்கோடு  அர்த்தநாரீஸ்வர் மலைக்கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் பக்தர்கள்  கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதையில் இருந்து கரட்டுப்பாளையம் செல்லும்  இணைப்பு சாலையில் குடியிருப்புகள் உள்ளன. இது மண்சாலை ஆகும். சமீபத்தில்  பெய்த மழையால் சாலையின் இருபுறமும் செடிகள் முளைத்து புதர்மண்டி  காணப்படுகிறது. சாக்கடை வாய்க்கால் இல்லாததால் கழிவுநீர் சாலையில்  ஓடுகிறது.மாதக்கணக்கில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரால் கடும்  துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இநத  வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தவிர, தெரு  விளக்கு வசதி இல்லாததால் இரவில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.  அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண்சாலையை தார்சாலையாக மாற்றி, சாக்கடை  கழிவுநீர் செல்ல வாய்க்கால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED சாலை விபத்துகளினால் ஏற்படும்...