வன ஊடுருவல் தடுக்க மோப்பநாய் மூலம் ரோந்து

உடுமலை, செப். 11:உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் சார்பில், வனக்குற்றங்களை தடுக்கவும், வன ஊடுருவலை தடுக்கவும் மோப்பநாய் வளர்க்கப்படுகிறது. மோப்ப நாயை பராமரிக்க தனியாக வன காப்பாளர், கார்டன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சின்னாறில் தனி ஷெட்டும் உள்ளது.சோதனைச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களில் முறைகேடாக எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா என மோப்பநாய் மூலம்  சோதனை செய்யப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் அவ்வப்போது, மோப்பநாயுடன் ரோந்து சென்று வனத்துறையினர் கண்காணித்துவருகின்றனர்

Advertising
Advertising

Related Stories: