திருப்பூரில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

திருப்பூர், செப் 11:உயர்நீதிமன்ற நீதிபதி மாற்றத்தை கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து நாடுமுழுவதும் உள்ள வ்ழக்கறிஞர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நட்த்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் அவிநாசி, காங்கயம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் 1500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று நடைபெற இருந்த வழக்குகள் மறுதேதியிட்டு ஒத்திவைக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: