பாலீஸ் போட்டு தருவதாக கூறி 2.5 பவுன் நகை திருட்டு

திருப்பூர், செப் 11:திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் பழனிக்குமார். பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துமுனீஸ்வரி (32). இவர் நேற்று பகல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நகை பாலீஸ் செய்து தருவதாக கூறி 2 பேர் வந்துள்ளனர். அவர்களை நம்பி தனது கழுத்தில் இருந்த 2.5 தங்க சங்கிலியை கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

ரசாயன நீரில் போட்டு, சிறிது நேரத்தில் திருப்பிக் கொடுத்து சென்றுள்ளனர். அவர்கள் சென்றவுடன் பார்த்த போது, அது போலி நகை என்பது தெரிந்தது. புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். என்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள அரிசிக்கடை ஒன்றிலும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீசார் அப்பகுதியில் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: