‘யார்னெக்ஸ்’ நூலிழை கண்காட்சி

திருப்பூர், செப்.11: பெங்களூரு எஸ்.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் மீடியா நிறுவனம் சார்பில், பின்னலாடை உற்பத்தியாளர் பயன்பெறும் வகையில், சர்வதேச நுாலிழை கண்காட்சி மற்றும் ‘பேப்ரிக்’ ரகங்களுடன் கூடிய, ‘டெக்ஸ் இந்தியா’ கண்காட்சி ஆண்டுதோறும் திருப்பூரில் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் ஐ.கே.எப்., வளாகத்தில், நாளை துவங்க உள்ள இ்க்கண்காட்சி 14ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில், இந்தியா உட்பட, பல்வேறு நாடுகளை சேர்ந்த, 139க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், பங்கேற்க உள்ளன. கண்காட்சியில், பருத்தி, பட்டு, கம்பளி உள்ளிட்ட இயற்கையான பனியன் துணி, சிந்தடிக் போன்ற செயற்கை நுாலிழை துணி, புதிய கலப்பின நூலிழை வகைகள் இடம்பெறுகின்றன. பனியன் ‘பேப்ரிக்’ ரகங்கள், எம்பிராய்டரிங் செய்த ரகங்கள், ‘கிரே’, இறக்குமதி செய்யப்பட்ட டெனிம், ‘பாட்டம் வெயிட்’, பிரின்டட், பட்டு, ‘வெல்வெட்’ ‘உல்லன்’, சட்டை தயாரிப்பிற்கான மில் ரகங்கள், விசைத்தறி உற்பத்தி துணிகள் இடம்பெறுகின்றன.

Advertising
Advertising

ஆடை தயாரிப்பிலும், மதிப்பு கூட்டு பொருளாக பயன்படும், பட்டன், ஜிப், ‘ஹங்கர்’, ‘இன்டர்லிங்க்’, லேபிள், ‘லேஸ்’, ‘ஸ்டோன்ஸ்’, ‘ஸ்டட்ஸ்’, ‘டேப்’, தையல் மற்றும் எம்பிராய்டரிங் நுாலிழைகளும், கண்காட்சியில் இடம்பெறுகின்றன. கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ‘‘கண்காட்சியில், இந்தியா மற்றும் தாய்லாந்து, அமெரிக்க நாடுகளை சேர்ந்த நிறுவனத்தினர் பங்கேற்கின்றனர். திருப்பூர் தொழில்துறையினருக்கு தேவையான, நூலிழை, ‘பைபர்’ மற்றும் ஆடை தயாரிப்பு பொருட்களை, காட்சிப்படுத்த, இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இருவேறு தேவைகளுக்காக, கண்காட்சிக்கு வருவோர், நுாலிழை, ‘பைபர்’ வாங்குவது மட்டுமல்ல, புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: